வியாழன், 14 அக்டோபர், 2010

அமெரிக்கா மண்டைதீவில் ஹோட்டல் அமைக்கிறது(அதிசயம் ஆனால் உண்மை)

அமெரிக்க நிறுவனம் ஒன்று மண்டைதீவில் ஹோட்டல் அமைப்பதற்கான முதலீட்டு முயற்சி களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்து அதிகாரிகளுக்கும் அரசி யல் வாதிகளுக்கும் கண்ணில் படாமல்போன மண்டைதீவை அமெரிக்கா கண்டறிந்தமை மன நிறைவைத் தருவதாகும். மண்டைதீவின் அபிவிருத்தி மற்றும் அங்கு ஏற்படுத்தக்கூடிய பறவைகள் சரணாலயம், இறால் வளர்ப்புத் திட்டம் பற்றி எல்லாம் இவ் விடத்தில் பல தடவைகள் எழுதியிருந்தோம்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு-திருமதி யூட்விஜயதாஸ்தம்பதிகளின் செல்வப்புதல்வி-யூலிஷா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 13-10-2010 அன்று தனது அப்பா-அம்மா-மாமாமார்-அத்தைமார்பெரியப்பா-பெரியம்மா-அக்காமார்-அண்ணாமார்-மச்சாள்மார்-மச்சான்மார் சித்தப்பா-தொட்டப்பா-தொட்டம்மா-நண்பர்கள்-எல்லோரும் வாழ்த்த-சுவீடனில் உள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இவரை அன்போடு வாழ்த்துபவர்கள் அப்பா-அம்மா
உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-அல்லைப்பிட்டி மக்கள்
அல்லையூர் இணையம்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்- திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை

தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர்க் காணிக்கை

                                              
அல்லையூர் கறண்டப்பாய்க் கந்தசுவாமி ஆலயத்தில்
  நல்லவர் அருளம்பலம் நாடிநின்ற திருப் பணியே!
வல்ல அறங்காவலரின் வரிசையிலே முதல்வராய்ப்
  பல்லாண்டு காலமாய்ப் பாடுபட்டு உழைத்திட்டார்.
முக்கால் நூற்றாண்டு முருகபணி ஆற்றியவர்
இக்காலம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.
  தற்கால ஆலயப் பரிபாலன சபையினர் நாம்
பொற்கால மனிதருக்குச் சூட்டுகின்றோம்
                               அஞ்சலிகள்


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம்.


அல்லைப்பிட்டி கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலய
                                                  பரிபாலன சபை

வியாழன், 7 அக்டோபர், 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும்கொண்ட திரு சிவபாலன்-ஆனந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுதர்சன்தனது 12வது பிறந்தநாளை பிரான்ஸில் உள்ள தமது இல்லத்தில் சிறப்பாக-கொண்டாடுகின்றார்.அவரை -அல்லைப்பிட்டி மக்கள்சார்பிலும்-அல்லையூர்இணையம் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

புதன், 6 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டியில் தகவல் மையம்

அல்லைப்பிட்டியில் தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்டவேலைகளில்அல்லையூர்இணையம் ஈடுபட்டுள்ளது.                       முதற் கட்டமாக வெளிநாடுகளில் வாழும் எம்மூர் மக்களுடனான தொடர்புகளை இலகுப்படுத்தும்நோக்கோடு அமையவிருக்கும் இத்தகவல் மையத்திற்கான இடம் அல்லைப்பிட்டியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து படித்த இளைஞர்களுக்கு பகுதிநேரவேலை வாய்ப்பினை வழங்குவதோடு,இணையவசதி தொலைபேசி வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதே! இதன்நோக்கமாகும்.
01/01/2011 அன்று இந்த தகவல் மையம் செயற்படத் தொடங்கும் என்பதனை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.இத்தகவல் மையத்தினால்
அல்லைப்பிட்டி-மண்கும்பான்-மண்டைதீவு -மக்கள் பெரிதும் பயனடைவர்
என நம்புகின்றோம்.
குறிப்பு*******.உங்கள் கருத்துக்களையும்-ஆலோசனைகளையும் எதிர் பார்க்கின்றோம்.

அன்னை திருமதி சிரோன்மணி தில்லைநாதன் அவர்களுடைய ஆண்டுத்திவச நிழற்படத்தொகுப்பு

அன்னை திருமதி-சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் முதலாம் ஆண்டுத்திவச நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!அல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின்-இல்லத்தில் 05-10-2010-செவ்வாய்க்கழமை அன்று நடைபெற்றது.
மேலும் கீழே 28 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

செவ்வாய், 5 அக்டோபர், 2010

தாலாட்டும் ஊர் ஞாபகங்கள்

                                            அல்லையூர்-த.தவபாலன்
ஒற்றைப் பனைமர நிழலும்-ஈச்சம்
பற்றைக் காடுகள் பலவும்
பழகித் திரிந்த தோழர் பலபேர்-நினைவும்
பறித்துத் தின்ற மாங்காய்ப் பிஞ்சும்
அம்மா காச்சிய ஒடியல் கூழும்
நினைவை நிறைக்கிறதே!
நெஞ்சைத் துக்கம் அடைக்கிறதே!

படித்து வந்த பள்ளிக் கூடம்
நடித்து மகிழ்ந்த நாடகக் கலைகள்-
குடித்துக் களித்த இளநீர்-நொங்கு
திகட்ட-திகட்ட நெஞ்சம் நினைக்கும்.
நினைக்க- நினைக்க இதயம் மகிழும்

நட்டநடு வீதியில் கிட்டிப்புல்லடித்து
சுடு மணலில் கிளித்தட்டு மறித்து-
வெற்றுக் காலுடன் உதைபந்தடித்து
ஊருக்குள் விளையாடிய பொழுதுகளெல்லாம்
கனவினில் வருகிறதே! கண்ணீர் தான் சொரிகிறதே!

புசிக்காத வயிறு பசியினில் கொதிக்க-
கடந்து போகுமிதுவுமென்று
அசைக்க முடியாத தன்னம்பிக்கை மனதிலிருக்க
எதிர்த் தோடினோம் இடர்கள் பொடிபட
இன்னமும் ஓடுவோம்-கனவுகள் மெய்ப்பட......

தானத்தில் சிறந்தது அன்னதானம்!

அல்லை கறண்டபாய் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள்
பசியாறுவதை படத்தில் காணலாம்.

திங்கள், 4 அக்டோபர், 2010

அல்லையூர் இணையத்திற்கு மனந்திறந்து வந்த மடல் ஒன்று!


அல்லையூர் இணையத்திற்கு!  எனது அன்பு கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! உரித்தாகுக! அல்லையூர் இணையத்தளம் எமது கிராம மக்களின் உறவுப்பாலமாக எமது ஊரை நினைத்துப் பார்க்கவைக்கும், கடமையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றது. இதற்காக இந்த இணையத்தை பாராட்ட விரும்புகின்றேன்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

அல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின் இல்லத்தில்
5/10/2010 செவ்வாய்கிழமை நடைபெறும் ஆண்டுத் திவச
நிகழ்வுகளை இத்தளத்தில் பார்வையிடலாம்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில்

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்பணியினை பிரான்ஸில் வசிக்கும் எஸ்-இராஜலிங்கம்(S-R)அவர்கள் தமது பெற்றோர்களின் நினைவாக இச்சுற்றுமதிலை அமைத்துக் கொடுப்பதாகக் அல்லையூர் இணையத்திற்கு கூறினார்.தொடர்ந்து மதில் அமைக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.
மேலும் கீழே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

அமரர் மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

திருகோணமலையை பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்கொண்ட அமரர் திரு மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரித்திய நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!
மேலும் கீழே 15 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

வைரம் பாய்ந்த உடம்பு


சனி, 2 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்ஆலய பரிபாலனசபையின் அறிவித்தல்

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்ஆலய பரிபாலனசபையினர்அல்லையூர் இணையத்திற்கு கறண்டப்பாய் ஸ்ரீ முருகன் ஆலய நிதிநிலைவிபரம் அடங்கிய புத்தகத் தொகுப்பினை அனுப்பி வைத்துள்ளனர். இதனைப்பெறவிரும்பும் பிரான்ஸ் வாழ் அல்லைப்பிட்டி மக்கள் எம்முடன் தொடர்பினைஏற்படுத்தவும்.

அல்லையூர் இணையம் 01/10/2010 வெள்ளி அன்று அல்லைப்பிட்டியில் நடத்திய உதவித்திட்ட நிகழ்வு

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் -வறுமைக்கோட்டின்கீழ்
வாழும் 31 குடும்பங்களை,அல்லைப்பிட்டி கிராமசேவையாளரூடாக தெரிவுசெய்து
அவர்களுகான நிதியினை பிரான்ஸில் வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் திரட்டி(திருமதி
தேன்மொழி-இராமலிங்கம்-20000-00 ரூபாக்களும் மற்றும் இரு அல்லைப்பிட்டி மக்களும்
தலா-10000.00 ரூபாக்கள்)அனுப்பியிருந்தது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அல்லைப்பிட்டி புனித பிலிப் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பொறுப்பேற்று மிகச்சிறப்பாக நடத்தினர்.அத்தோடு இன்நிகழ்வில் கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள்-சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்- மற்றும் வாகீசர் சனசமுக நிலைய நிர்வாக உறுப்பினர்களும்-பெருமளவானபொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.அத்தோடு இங்கு வருகை தந்த அனைவருக்கும்வடை -தேனீர் முதலியன வழங்கப்பட்டன.இதில் கலந்து ஆயிரம் ரூபாக்களை பெற்றுக்கொண்டமக்கள் அனைவரும் அல்லையூர் இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் கீழே 65 படங்கள் பதியப்பட்டுள்ளன!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

இதுவரை மண்டைதீவில் 950 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாம்.

கடந்த யுத்த காலப் பகுதியின் போது மண்டைதீவில் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சமீபமாக புதைக்கப்பட்டிருந்த சுமார் 950 வரையிலான மிதிவெடிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக டெனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

அல்லை பாரசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்க அடிகல் நாட்டும் விழா!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும்விழா 27/09/2010 திங்கள் அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகள்வில் பராசக்தி வித்தியாலய அதிபர்-ஆசிரியர்கள் உட்பட பெருமளவானபொதுமக்களும்-மற்றும் இளைப்பாறிய ஆசிரியர் திரு சோ.சுப்பிரமணியம்அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். எமது செய்தியாளர் திரு. மாறன் அவர்கள்எடுத்தனுப்பிய 22நிழற்படங்களை இணைத்துள்ளோம்.
அடிக்கல் நாட்டும் விழா கீழே படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன!


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா

கீழே மணிவிழா படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன!
வீரகேசரி பத்திரிகையில் இருந்து.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா 24.09.2010 அன்று கலாசாலையில் உள்ள ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி நா.சண்முகலிங்கன், பேராசிரியர் ம. இரகுநாதன், கலாநிதி த.கலாமணி, லயன் டாக்டர் வை.தியாகராஜா உள்ளிட்ட பெரியோர்கள் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடப்பிடமாகக் கொண்ட செ.திருநாவுக்கரசு வாழ்வில் மிக எளிமையான நிலையில் இருந்து உயர்ந்தவர்.




சனி, 25 செப்டம்பர், 2010

ஊருக்கு உதவிடுவோம் வாரீர்!!!

நீங்கள்கீழேபார்வையிடும்நிழற்படங்கள்அல்லைப்பிட்டிபராசக்தி வித்தியாசாலையின்-இன்றைய தோற்றமே! பாடசாலையின் கிழக்குப்
பக்கமும்-தெற்குப்பக்கமும் மதில்கட்டப்பட்டுள்ளது.மிகுதியாகவுள்ளவடக்கு மேற்குப் பக்கத்திற்கு மதில் கட்டுவதற்குத் தேவையான நிதிஉதவியைபுலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் பெற்றுமதிலைக் கட்டித்தருவதாக அல்லையூர் இணையம் பாடசாலைநிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலில் உறுதியளித்திருக்கின்றது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டியில் நடைபெறும் இரு சட்டவிரோத சம்பவங்கள்- நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன!

கடந்த சில நாட்களாக அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் அதிகளவான மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவ்வூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் மாடுகள் வெட்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புதன், 22 செப்டம்பர், 2010

உங்கட பிள்ளையள் எங்க போகினம்...யாழ் வலம்புரியில்

வெளிநாட்டில இருக்கிறவர்கள்-குளிரிலும்,பனியிலும், சாப்பிட்டும்,சாப்பிடாமலும் தம்மை வருத்தி உழைத்துஊருக்கு பணம் அனுப்பி வைக்க -அங்கு இருப்பவர்களோ! வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது . என்றமமதையோடு,காசைத் தண்ணியாய் செலவுசெய்து மறுபடியும்-மறுபடியும்-போன்பண்ணி.............

அல்லைப்பிட்டியில் இன்று நடைபெற்ற தென்னை நாற்றுகள் நடும் விழா!

தென்னை நாற்றுக்கள்
நடப்படும் இடம்
அல்லைப்பிட்டியில் 21/09/2010 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தென்னைநாற்றுக்கள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் வேலணை அரச அதிகாரிகளும்-அல்லைப்பிட்டி கிராம சேவையாளரும்-பொதுமக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்தனர். அல்லைப்பிட்டி அலுமினியம்தொழிற்சாலைக்கு தெற்குப்பக்கமாகவும். வைரவர் ஆலயத்திற்கு வடக்குப் பக்கமாக அமைந்த பல ஏக்கர் வயல்நிலப்பரப்பில் இந்த தென்னை நாற்றுக்கள்நாட்டப்படுகின்றன.
மேலும் 9படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டியில் நடந்த நிகழ்வின் நிழற்படம்

அல்லையூர் இணையத்திற்காக பிரத்தியேகமாக
நிழற்படம்பிடிக்க ஒத்துழைக்கும்அரசஅதிகாரிகளுடன் மக்கள்

அல்லைப்பிட்டி வாகீசர் நிலையத்திற்கு வீரகேசரி......

அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமுக நிலையத்திற்கு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் வசிக்கும் திரு யூலியேசு ராஜேஸ்அவர்களின் ஆதரவில் ஒரு வருடத்திற்கான சந்தா செலுத்தப்பட்டு ,வீரகேசரி
வாரப்பத்திரிகை இந்தவாரம் முதல் மக்கள் வாசிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே-அல்லையூர் இணையத்தின் பொறுப்பில் உதயன் நாளிதழ் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுளளது .என்பதும் நீங்கள் அறிந்ததே!

மண்டைதீவு ஒரு குறும் பார்வை!

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள 8 தீவுகளில் (எழு தீவு என்பது தவறானது) ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்..ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்!



இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்.
ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்

இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களில் இருவர் படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழில் பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

Hi Jeya




Hi Jeyaமுதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

வேலணை சாட்டிமாதா -பெருநாள் நிழற்படத்தொகுப்பு!

18/09/2010 அன்று இடம்பெற்ற வேலணை சாட்டி மாதா
திருச்சுருப பவனியின் நிழற்படத்தொகுப்பு

யாழ்ப்பாணத்தில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.சத்தியேந்திராவே இவ்வாறு கட்சி ஆரம்பித்துள்ளார்.

யாழில் சட்டவிரோத கழிவுநீர் தடுப்புச் சுவர்கள் மாநகரசபையால் இடிப்பு!


யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற ஓன்பது கழிவு நீர் தடுப்பு சுவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் 
மாநகர சபை இடித்து உடைத்துள்ளது.


வாய்க்கால்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதைத் தடுப்பதன் மூலம் டெங்கு நோயை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் மாநகர சபையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனி, 18 செப்டம்பர், 2010

16 வது ஆண்டு நினைவஞ்சலி



முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வேலணை-சாட்டி மாதா பெருநாள்!






வேலணை சாட்டி மாதா ஆலயப் பெருநாள் நாளை18-09-2010சனியன்று
வெகுசிறப்பாக நடைபெறும்.




மட்டு -பாரியவெடி விபத்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைகளின்போது பாறைகளை உடைக்கின்றமைக்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொள்கலன் ஒன்று இவ்வாறான ஒரு தொகை வெடிபொருட்களுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டியில் நடத்திய 2வது நிகழ்வின் பதிவுகள்!

மேலும் 20 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாசாலைக்கு பிரதி எடுக்கும் இயந்திரம்(photo copy)மிசின் வளங்கும் நிகள்வு 16/09/2010 வியாழன் அன்று கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.


யாழ் பண்ணை வீதியை மண்டைதீவுச் சந்திவரை செப்பனிட அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தரவு!

பண்ணை-வீதி
தீவகம் பண்ணை வீதியில் யாழ்.-மண் டைதீவுச் சந்தி வரையான பகுதியை வரும் மழை காலத்திற்கு முன்னர் தார் இட்டு செப் பனிடுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக யாழ். மாவட்ட அவசர மீள்திட்ட நிதியிலிருந்து 15 மில்லியன் ரூபாய் நிதியை வழங்குமாறு யாழ். அரச அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

4 நாட்களைக் கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டியில் வளங்கிய உதவித்திட்ட நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் ஜெர்மனியில் வாழும் எம்கிராமத்து
உறவின் ஆதரவில் அல்லைப்பிட்டியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்
மக்களுக்கு முதல் கட்டமாக முதலாம் வட்டாரத்தில் வாழும் 15 குடும்பங்களுக்குதலா ஆயிரம் ரூபா வீதம் 13/09/2010 திங்கள் அன்று வாகீசர் சனசமுக நிலய மண்டபத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சனசமுக நிர்வாக சபையும்தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வில் தேனீர் விருந்தும் இடம்பெற்றது.
மேலும் கீழே 23 படங்கள் இணைக்கப்பட்டுளளன!







அல்லைப்பிட்டியில் தினசரி நாளிதழ் உதயன்--


அல்லையூர் இணையத்தின் நேரடி ஆதரவில் அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுகநிலையத்தில் 30/08/2010 திங்கள் முதல் தினசரி நாளிதழான உதயன் பத்திரிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுஇருந்தன. ஆவலோடு பொதுமக்களும் வாகீசர் நிர்வாக சபை உறுப்பினர்களும்பத்திரிகையை பார்வையிடுவதை கீழே இணைக்கப்பட்டுள்ள 7 படங்களில்காணலாம்.