செவ்வாய், 4 மே, 2010

திங்கள், 3 மே, 2010

சமைப்போரும் சுவைப்போரும்!

அமரர் திரு க.வ.ஆறுமுகம் அவர்கள்
சமையலைச் சாப்பிட்டு சுவைதரம் சொல் முழுப்பேரும்
சமைக்கவும் தெரிந்தவர்கள் என்று நம்பக்கூடாது
சிலருக்கே இரண்டும் தெரியும் பலருக்கோ
சமைக்கத் தெரியாது சாப்பிடத்தான் தெரியும்
இந்தச்சாப்பாட்டு இராமர்கள் எல்லோரும்
சமைப்போரும் தம்மைப்போல் சாப்பிடுவோர் சமையலின்
தரம்சுவை தெரிந்தவர்கள் என மறந்தும் எண்ணாமல்
எந்தச் சமையலை எவர்செய்து தந்தாலும்
"சத்துணவு" சுவைஎன்றும் சமைப்பதெவ் வாறென்றும்
"பட்டியல்" பந்தியை முதலில் பகர்ந்துவிட்டு
குணங்களாய் முன்னிற்கும் எதுகுறித்தும் சொல்லாது
"உப்பில்லை ! புளியதிகம்! உறைப்பிதற்குப் போதாது
இதுவேக வில்லை உடம்பிற் காகா" தென்று
குற்றம் குறைகளையே குடைந்தெடுத்து மிகச்சொல்லி
மொத்தத் திலேசமையல் "முழுமோசம்" என்பதுபோல்
சமைப்போரை எவ்விதத்தும் தரம்சுவைசொல் தம்மைவிட
மதிப்பிற் குறைந்தோராய் மக்களை எண்ணவைக்க
இப்படி நீதியற்ற தீர்ப்பையே சொல்லிவந்தால்
எப்படி இங்கே சமையற் கலைவளரும்?
எந்தச் சமையலுக்கும் இதுபோன்றே தீர்ப்புரைக்கும்
இந்தச் சாப்பாட்டு இராமர்களில் ஓர்இராமர்
தற்செய லாகத்தம் வழமைக்கு மாறாக
"சத்துண"வென் றாலிதுதான்! சமையற் கலைநுட்பம்
அத்தனையும் சிறப்பாய்க் கையாண்டு ஆக்கியதால்
"தரம்சுவை உயர்வு" என்று சமையலொன்றைச் சொல்வாரேல்
நிச்சயமாய் நம்பலாம் அந்தச் சமையலினை
செய்தவர் இவருக்கு தேவையான ஒருவர்
அல்லதிவரை வழிபடும் பக்த ரென்று!

              ஊர்வாய்(கவிதை) 

அலசியொன்று ஆராய்ந்து விரித்துச் சொன்னால்
  "அதிகப்பிர சங்கமிது அறுவை" என்பார்
அடக்கமாய்ச் சிலசொல்லில் விளக்கிச் சொன்னால்
    "ஆள்ஊமை இல்லை ! அவ்வளவே" என்பார்
எளிமையாய் வாழ்வதினைப் பார்த்து விட்டு
    " ஈச்சப்பி இவன்" ! என்றுபழித்துச் சொல்வார்
ஏற்றபடி தாராளச் செலவு செய்தால்
     "ஊதாரிப் பயலிவன்" என்றேசுவார்கள்
ஏழைகளுக் கிரங்கிஓர் உதவி செய்தால்
    "இதற்குள்ளே ஏதோவொன் றிருக்கு" தென்பார்
இரங்காமல் உதவாமல் இருந்து விட்டால்
     "இவனுமொரு மனுப்பிறப்போ?" என்று கேட்பார்
பெண்களுடன் சகசமாய்ப் புழங்கல் கண்டால்
     "பிடித்திருக்கு இவனுக்கு பெண்பித்" தென்பார்
அல்லை வாகீசர்
புழங்காமல் பேசாமல் ஒதுங்கி வாழ்ந்தால்
     "பொடியனொரு மரக்கட்டை! பொம்மை!" என்பார்
எதிரிதனை எதிர்க்காமல் இருந்து விட்டால்
      "இவனுக்கு ரோஷநரம் பில்லை" என்பார்
"எதிரிதனை ஒழிக்காமல் உறங்கேன்" என்றால்
       "உதுதானாம்! உவன்படித்த படிப்!" பென்பார்கள்
எதிரிஎன்றும் நண்பன்என்றும் இனம் பாராமல்
      எவருடனும்,இத, மாக நடந்து கொண்டால்
"உன்னாணை இவன் பெண்ணாய்ப் பிறந்தருந்தால்
      எல்லா,ரோ---------இணங்கி!' என்பார்
இவர்கள் சொல்லு வதைனையெல்லாம் கேட்டுவாழில்
      எதுவுமே செய்யாமல் இருக்க வேண்டும்
எதுவுமே செய்யாமல் இருந்தால் கூட
       இவர்கள் விட்டுவையாது எதையோ சொல்வார்.