செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலய சிரமதான நிழற்படங்கள்!

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்
வருடாந்த திருவிழாவை முன்னிட்டு
பொதுமக்கள் சிரமதான பணியினை மேற்கொள்வதை
கீழே உள்ள 10 படங்களில் காணலாம்



பழைய சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த

பழைய சைக்கிளில் மாத்தறையிலிருந்து

 8 நாள்களில் யாழ்.வந்த தெனியாய வாசி

 26 ரூபாவுடன்வந்து முக்கிய இடங்களைப் பார்வையிட்டார்

யாழ்ப்பாணம்,செப்.1
மாத்தறை  தெனியாய பிரதேச தன் பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச் சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்த டைந்தார்.

3 தாலிக்கொடிகள்-பல சங்கிலிகள்-4கையடக்க தொலைபேசிகள்-16 ஆயிரம் ரூபா பணம் வாள்முனையில் கொள்ளை!

நள்ளிரவு நேரம் வீட்டை உடைத்து உட் புகுந்த கொள்ளையர்கள் வாள் முனையில் சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றில் இடம் பெற்றுள்ளது.

கல்வியோடு விளையாடும் கயவர்கள்!

பரீட்சை கேள்வி தாள் கடையில்

விற்பனை -போலீசார் முற்றுகை

கனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் வருவதாக-----

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

'கிளோப் அன்ட் மெயில்"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டு ள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

நச்சுத் திராவகத்தை தவறுதலாக அருந்திய 3 வயதுக் குழந்தை மரணம்

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுக் குழந்தை போத்தலில் இருந்த நச்சுத் திராவகத்தைத் தவறுதலாகப் பருகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. 

இச் சம்பவத்தில் சென்.ஜேம்ஸ் இளவாலையைச் சேர்ந்த ஆர்.ரெபேகா (வயது 3) என்னும் குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

யாழ்ப்பாணத்தில் மாதா சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் மாட்டீனார் குருமடத்திற்கு முன்னால் அமைந்துள்ள கொஞ்சேஞ்சி மாதாவின் புனித சிலை க்கு முன்னுள்ள உண்டியலும் திருச்சுருவ கண்ணா டியும் திட்டமிடப் பட்டு தீய சக்திகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மாட்டீனார் குருமடத்திற்கு முன்னால் அமைந்துள்ள கொஞ்சேஞ்சி மாதாவின் சிலை மரியன்னை  பேராலயத்தை முதன்மைப்படுத்தும் நோக்கில் ஆலய வளவுக்குள் நெடுங்காலமாக அமைந்துள்ளது.

இலங்கையர்களை கடத்தி அதில் ஒருவரை நிர்வாணமாக்கி படுகொலை செய்த---

இலங்கையர்களை கடத்தி படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று இலங்கையர்களை கடத்தி அதில் ஒருவரை படுகொலை செய்துள்ளதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள் புனரமைப்பு

யாழில் ஐந்து பாடசாலைகள் மீள் புனரமைப்பு   


யாழில் போரினால் சிதைவடைந்துள்ள ஐந்து பாடசாலைகள் மீள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது .
ISURU ப்ராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் இவை மீள் புனரப்பு செய்யப்படவுள்ளது .
சுன்னாகம் சகண்டவரோத்யா , சுழிபுரம் விக்டோரியா காலேஜ் , கரவெட்டி விக்னேஸ்வர , புத்தூர் சொமச்கண்ட .வரணி மகா வித்தியாலயம்
என்பனவே இந்த திட்டத்தின் கீழ் புதிய கட்டட தொகுதிகளுடன் மீள் புனரமைப்புடன் மிளிரவுள்ளது. 

சிலி நாட்டில் சுரங்கத்திற்குள் சிக்குண்டவர்களை மீட்க----

சிலிநாட்டில் சுரங்கப்பாதையில் மூன்று வாரங்களாக சிக்கியவர்கள் முதன் முறையாக தங்கள் குடும்பத்துடன் நேரடியாக உரையாடினர். சிலி நாட்டில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரும், தங்கள் குடும்பத்துடன் தலா 20 நிமிடங்கள் உரையாடினார்கள். சிக்கியவர்களில் ஒருவர் தான் நன்றாக உள்ளதாகவும், தனக்காக மிகுந்த பொறுமையோடு காத்திருக்கவும் என தனது தந்தையிடம் பேசினார். இவர்களை காப்பாற்ற அரசாங்கம் முயன்று வருகிறது. சிக்கியவர்களை காப்பாற்ற அமெரிக்காவின் நாசா முன் வந்துள்ளது. புது யூகத்தை வகுத்து அவர்களை காப்பாற்ற நாசா விஞ்ஞானிகள் முனைந்துள்ளனர்.

யாழில் இரவு நேரப் பேருந்துகளில் இளசுகளின் தொல்லை தாங்கமுடியவில்லை

யாழ்ப்பாணம்,ஓக.30
யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில்  மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவதால் பயணிக
ளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி  நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது.


குடிபோதையில் குப்பற விழுந்த பெண் குசியான இளைஞர்கள்!

குடிபோதையில் நடக்க முடியாமல் நடுத் தெருவில் விழுந்து அலங்கோலமான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர் நான்கு வாலிபர்கள். அவர்களைப் பிடித்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு அவரது தாயாரை வரவழைத்து கண்டித்து ஒப்படைத்தனர்.

ஜெயலலிதாவை எச்சரிக்கும் குஸ்பு----

எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சமீபத்தில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட நடிகை குஷ்பு.

மைக்கல் ஜக்சன் உடலை மீண்டும் தோண்டி எடுக்கத் திட்டம் _

மறைந்த உலகப்புகழ் பெற்ற பொப் பாடகர் மைக்கல் ஜக்சனின் உடலை மீண்டும் தோண்டியெடுத்துப் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மைக்கல் ஜக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்ப டாக்டர் கனாட் முர்றே கொடுத்த நச்சுத் தன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் அவர் மரணம் அடைந்தது விசாரணையில் தெரிய வந்தது. 

தர்மபுரி பஸ் எரிப்பு : மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி _

 2000ஆம் ஆண்டில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் ஒன்றை, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.

 அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆந் திகதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து நீதிமன்றில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதன் ஓரங்கமாகவே இந்த பஸ் எரிப்பும் நிகழ்ந்தது.

4 பிள்ளைகளை பஸ்சில் தவிக்கவிட்டு மைத்துனருடன்******


சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதர னுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட நபரும் அளவத்துகொட பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப் பட்டுள்ளனர். இது குறித்துக் கூறப்பட்டவை வருமாறு:

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் யதார்த்தபூர்மான அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டமொன்றின் மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்டர்போல் தேடும் 656 இந்தியர்கள் !

டெல்லி: சர்வதேச போலீஸான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் [^] இடம் பெற்றுள்ளனர்.

இதுவரை இந்தப் பட்டியலில் 656 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். பலர் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள். கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் தேடப்பட்டு வருகின்ரனர். 

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய விழா தொடக்கம்

Velankanniவேளாங்கண்ணணி: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கீழை நாடுகளின் லூர்து என போற்றி புகழப்படுவது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்தியாவில் உள்ள சில பசிலிக்கா எனப்படும் பேராலயங்களில் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

பாரீஸ் மாணிக்க விநாயகரின் தேர்த்திருவிழாவின் நிழற் படத்தொகுப்பு





பாரீ்ஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்
தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு 

படப்பிடிப்பு*****அல்லையூர் இணையத்தின் பிரான்ஸ் படப்பிடிப்பாளர்
திரு -எஸ்-வரதராஜா அவர்கள்
32 படங்கள் உள்ளே பதியபட்டுள்ளன




பாம்பு தீண்டி சிறுவன் பரிதாப மரணம் கிளிநொச்சியில் -----



கிளிநொச்சி,ஓக.29
உறக்கத்தில் இருந்த வேளையில் சிறு வனைத் தீண்டியது விஷப் பாம்பு. மறு நாள் சிகிச்சை பயனளிக்காத நிலையில்  அந்தச் சிறுவன் மரணமானான்.
உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த ஞான சீலன் நிலக்ஸன் றொபேட்(வயது 10) என்ற சிறுவனே மரணமானவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதா வது:
அண்மையில் மீள்குடியமர அனுமதிக் கப்பட்ட உருத்திரபுரத்தில் சிறுவனின் குடும்பத்தினர் தறப்பாளால் குடிசையை அமைத்து வசித்தனர். கடந்த  26ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சிறுவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது பாம்பு தீண்டியுள்ளது.

பெற்ற மகனை தன் கள்ளக்காதலுக்காய் கொடுரமாய் கொன்ற தாய்--


கள்ளக்காதலை கண்டித்ததால், 13 வயது மகனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.


ஆந்திர மாநிலம், நளகொண்டா மாவட்டம், மிரியல்குடா மண்டலம், தமர்ச்சலா கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஷிவமணி. அவருடைய 13 வயது மகன், தாயாரின் கள்ளக்காதலை கண்டித்ததாக கூறப்படுகிறது.

வாகன நெரிசலால் மூச்சுவிட முடியாமல் தவிக்கும் யாழ்ப்பாண மக்கள்

Click to open image!Click to open image!யாழ் மாவட்டத்துக்கு தற்போது அதிகளவான வாகனங்கள் வந்து செல்வதால் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது.



வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவமும் தற்போது இடம்பெறுவதால் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த கால யுத்தத்தினால் அபிவிருத்தி அடையாமல் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த யாழ். மாவட்டத்தின் பல வீதிகளும் இன்னமும் விரிவாக்கப்படாத நிலையிலேயே இருக்கின்றன.

அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய திருச்சுருப பவனியின் நிழற்படத் தொகுப்பு

அல்லைப்பிட்டி புனித சஞ்சுவானியார் ஆலயத்தில்29/08/2010 ஞாயிறு நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு 26 படங்கள் இணைக்கப்
பட்டுள்ளன!
நிழற்படப்பிடிப்பு எமது செய்தியாளர் p-t-மாறன்
மேலும் படங்களைப் பார்வையிட கீழே அழுத்தவும்
அத்தோடு உங்கள் கருத்துக்களை commens இல் பதிவு
செய்யவும்

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயத்திருவிழா அறிவித்தல்!

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயநிர்வாகத்தெரிவு
28/08/2010 சனியன்று ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

கிணற்றில் சிசுவின் சடலம் திருகோணமலையில் சம்பவம்!

புதிதாகப் பிறந்த சிசுவொன்றின் சடலம் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்றிலிருந்து  மீட்கப்பட்ட சம்பவம் திருமலை உப்புவெளியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி, டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அச்சிசுவின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குறித்த பெண் போலியான  பெயர் விபரங்களை மருத்துவமனையில் கொடுத்துள்ளதால் அப்பெணணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனி, 28 ஆகஸ்ட், 2010

274 கிலோவுடைய பெண்ணை வீட்டிலிருந்து நகர்த்தினர்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த பெண் உம்னாய்பான் டாங்ப்ரபாய்(40). நாட்டிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான். எடை 274 கிலோ.  மிகவும் பெரிதாக இருப்பதால், கடந்த 3 ஆண்டாக இவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை. இவரால் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே நடந்து செல்ல முடியும். இவருக்கு எல்லா உதவிகளையும் இவரது மகனே செய்து வந்தார்.

13 ஆணிகள் 5 ஊசிகள் இன்னும் 6ஊசிகள் உடலில் உள்ளன கொடுமையிலும் கொடுமை---

சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவிலிருந்து கடுமையான வலியுடன் நாடு திரும்பிய எல்.ஜி.ஆரியவதி என்ற இந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மண்டைதீவில் மர்ம நபர்களால் வீடு ஒன்று சிதைக்கப்பட்டுள்ளது!

மண்டைதீவுப் பிரதேசத்தில் நேற்றிரவு சில வி­மிகளால் சேமன் கைலாசபிள்ளைக்குச் சொந்தமான, மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகா மையில் உள்ள  வீடு பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட் டுள்ளது. நேற்றிரவு திடீரென வீட்டினுள் உட்புகுந்த சில வி மிகள் சுவர்களை உடைத்தும் வீட்டின் மேல் ஏறி ஓடுகளை கழற்றி வீசியும் வீட்டையும் சின்னாபின்னமாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

உள் ஊருக்குள் உலவும் உல்லாசப் பயணிகள்!

மேலே காணப்படும் நிழற்படம் தென்னிலங்கை
உல்லாசப்பயணிகள் படம் பிடிக்கும் இடம் யாழ் ஔவையார்
சிலை

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபரை அடித்துக்கொன்ற பெண்!

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த ஆண் ஒருவரை பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் லுனாவில சிறியகம்பல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விதவைப்பெண் பொலிஸாரிடம் நேற்று காலை  சரணடைந்துள்ளார்.

கணவர் இறந்தபின் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த தனக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்குள் வந்த இந்நபரை, தான் தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதுவும் இப்போது முக்கியம்


பிரபுதேவா & நயன்தாரா டிசம்பரில் திருமணம்


சென்னை : பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா, சமீபகாலமாக புதிய படங்கள் 
எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் மட்டும் நடித்து வந்தார். அதையும் முடித்துவிட்டார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஒப்புக்கொண்டிருந்த படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். புதிய பட வாய்ப்பு எதையும் ஏற்கவில்லை.

இதனால் பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி உள்ளது. டிசம்பரில் இவர்கள் திருமணம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா மானேஜரிடம் கேட்டபோது, ‘கைவசம் உள்ள படங்களை நயன்தாரா முடித்துக்கொடுத்துவிட்டார்.

புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றபடி வேறு எதுவும் தெரியாது’ என்றார். பிரபுதேவா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

அதிசயம் ஆனால் உண்மை! உயிருடன் பாம்பை அடைத்து-------

         விஷப்பாம்பு வைன்(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும்.
பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனாலினால் விஷ தன்மையை முறித்துவிடும்.

இலங்கையில் விசா நடைமுறையில் அடுத்த மாதம் முதல் மாற்றம்


இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கிய பிற்பாடு விசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி பொதுவாக இருக்காது.


ஆயினும் சிங்கப்பூர், மாலைதீவுப் பிரஜைகளுக்கு மாத்திரம் விதி விலக்கு. இதன்படி எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்  30 ஆம் திகதியுடன் ஒன் எரைவல் விசாக்கள் ரத்து செய்யப்படடுகின்றன.


இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களின் மார்பழகைப் பார்த்து பணத்தை கோட்டைவிட்ட தமிழர்!

பாரீஸ் : பிரான்சில் ஏ.டி.எம்., மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த நபரிடம்,  இரண்டு இளம் பெண்கள் தங்கள் மார்பழகைக் காட்டி,  அவரது கவனத்தைத் திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில், "லெப்ட் பேங்க்' என்ற பகுதியில் , உள்ள ஏ.டி.எம்., நிலையத்தில் ஒரு தமிழர் பணம் எடுப்பதற்காக ரகசிய எண்ணைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, 20 வயதுடைய இரு இளம் பெண்கள், அவரருகில் தங்கள் மார்பழகைக் காட்டியவாறு வந்து நின்றனர். கவர்ச்சியில் மயங்கிய அந்த நபர், ஒரு பெண்ணை உற்றுப் பார்த்துக்  கொண்டிருந்த போது, மற்றொரு பெண், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

யாழ் நல்லூரில் பெண்களிடம் சேட்டை விட்ட இளைஞரை நையப்புடைத்த இராணுவம்!


நல்லூர் திருவிழாவை இன்று முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதிகள் இருவர் மீது அங்க சேஷ்டை புரிந்து தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்டார்.

நல்லூர் இரண்டாம் கட்டைவீதி வழியாக மாலை 6 மணியளவில் யுவதிகள் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை இந்த இளைஞன் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றார்.

அங்க சேட்டையும் புரிந்துள்ளார். இதனையடுத்து யுவதிகள் இருவரும் அவ்வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினரிடம் முறையிட்டனர்.

பொம்மைகளுடன் சேர்த்து நிஜபுலிக்குட்டியை கடத்திய பெண்!


தாய்லாந்தில்
 
 பொம்மைகளுடன் சேர்த்து
 
 புலிக்குட்டியை கடத்த முயற்சிதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஈராக் செல்ல ஒரு பெண் விமான நிலையத்துக்கு வந்து இருந்தார். அவரது பொருட்களை எக்ஸ்ரே மூலம் விமான நிலைய ஊழியர்கள் பரிசோதனை 
செய்தனர்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

57 நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்

கனடாவுக்கு 492 தமிழர்கள் கப்பலில் சென்று புகலிடம் கோரியுள்ள நிலையில் போலி அகதிகள் கனடாவுக்கு பெரும் எண்ணிக்கையில்செல்வதாக கூறப்பட்டாலும் உண்மைகள் வேறுபட்டவையாக உள்ளதாக அந்நாட்டுப்பத்திரிகையான "வன்கூவர்சன்%27 தெரிவித்திருக்கிறது.

வயிற்று வலியால்துடித்த பெண்ணின் வயிற்றுக்குள் 22 கிலோ கட்டி---


அர்ஜென்டினா, இங்கிலாந்தில் உள்ள லோமாஸ்டி ஷமோரா என்ற நகரை சேர்ந்த 54 வயது பெண் கடந்த 18 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே இருந்தது. எனவே, அவர் அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் எர்ஸ் என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் 
அவர் அனுமதிக்கப்பட்டார்.

வணக்கம்


உங்கள் விளம்பரங்கள்
அனைத்தையும்  இப்பகுதியில் பதிவுசெய்கினே்றோம் நீங்கள்தேடும்
எம் ஊர் மக்களுடனான தொடர்பினை ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்தித்தருகின்றோம் அத்தோடு எம் கிராமத்து
நிகழ்வுகளை உடனுக்குடன் இப்பகுதியில் எடுத்து வருகின்றோம் அத்தோடு****

பார்வையற்றோருக்கு செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை


லண்டன், கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி 
சாதனை படைத்துள்ளார்.

அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார். இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார்.

மட்டக்களப்பில் மண் லொறி மோதி மாணவி மரணம்

மட்டக்களப்பு நகரில் இன்று காலை 7.00 மணியளவில், மண் லொறியொன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். 

மட்டக்களப்பு வின்ஸன்ட் உயர்தர மகளிர் பாடசாலையில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கம் சற்குணம் கோகிலா எனும் மாணவியே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

62 வயது முதியவரை கத்தியால் குத்திய மர்மநபர் யாழில் சம்பவம்!

மருதனாமடத்தில் இயங்கிவரும் அருளகம் மகளிர் இல்ல காவலாளி இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிரஸ்தாப நபர் காவற் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அங்குவந்த மற்றொரு நபர் இவரின் மீது கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் லக்ஸ்மனன் (வயது 62) என்பரே படுகாயமடைந்தவராவார். இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச் சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலை மாணவனுக்கு கத்திக்குத்து

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து வரை சென்றதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார்.
இந்தச் ஷம்பவம் நேற்று மாலை கலட்டிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் ஆண்டு கலைப்பீட மாணவர் ஒருவரே மூன்றாம் ஆண்டு கலைப்பீட மாணவனான மன்னாரைச் சேர்ந்த லக்ஷ்மன் (வயது 25) என்பவரைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவஷர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நிழலாடும் நினைவுகள்

யாழ் மண் இணையத்தளத்தைப் பார்த்தபோது என்னை அறியாமல் பழைய நினைவுகள் வந்து மோதின. என் அனுபவப் பகிர்வையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

1985ஆம் ஆண்டு என் உயிர் நண்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாவுக்கு வேட்டி கட்டிக்கொண்டு சைக்கிளில் போயிருந்தேன். இதற்கு முன்னர் வேட்டி கட்டிப் பெரிதாகப் பழக்கமில்லை. முதல் தடவை என்ற காரணத்தால் வேட்டியில் சற்று கவனமாகவே இருந்தேன். 

நல்லூர்த் தேர்திருவிழாவன்று சனக்கூட்டத்தைச் சொல்லவும் வேண்டுமா? மண்போட்டால் மண் விழாது என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் அங்கு மிகத்தெளிவாக விளக்கப்படும்
. 
குறித்த நேரத்தில் கந்தன் தேரேறி வருவதை கோவிலின் முன் வீதி மதில் ஓரத்தில் நின்று நானும் ரசித்தேன். சனக்கூட்டம் தேரோடு சென்ற பின்னர், நின்ற சனக் கூட்டத்தை விலத்தி, ஒருவாறு ஆலயத்துக்குள் சென்று வாசலை வந்தடைந்த போது மேலாடையை களைந்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டுமென நண்பன் சொல்ல திகைத்து விட்டேன்! 

மேலாடைகழற்றுவதில் தயக்கம் ஒரு பக்கம், அரையில் உள்ள வேட்டி வழுகிவிடாது சணல் கயிறு கொண்டு சுற்றிக்கட்டியிருந்ததால் வெட்கம் ஒருபுறம், இருந்தாலும் நண்பனின் அழைப்பை தட்டமுடியாமல் மேலாடையைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றேன்.