புதன், 30 ஜூன், 2010

     மண்கும்பானைச் சேர்ந்தவர்கள் வாள்வெட்டில்
                         படுகாயம்
                   ***********************

இனந்தெரியாதோர் வீடு புகுந்து மேற்கொண்ட வாள் வெட்டில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில்யாழ் பொற்பதி வீதி கொக்குவிலில் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதல் சம்பவத்தில் அதேயிடத்தில் வசித்து வரும் மண்கும்பானைச் சேர்ந்த ப.சாந்தலிங்கம் (வயது 60) அவரது மனைவி சா. தங்கநாயகி மற்றும் தியாகராஜா (வயது 44) ஆகிய மூவருமே படுகாயமடைந்தவர்கள் ஆவர். வாகனம் ஒன்றில் வந்த சிலரே இத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எமது கிராமத்தை சேர்ந்தவர்களின் மரண 
                  அறிவித்தல்கள்
             **************************
மண்கும்பானை சேர்ந்த திரு செல்லத்துரை சுதாகரன்(சுதா)அவர்கள்
28/06/2010 அன்று பிரான்ஸில் காலமானார்.


அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு தருமலிங்கம்
செந்தில்வேல்(குணம்)அவர்கள்13/05/2010 அன்று பிரான்ஸில் காலமானார்.


அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மண்கும்பானை வாழ்விடமாகவும் கொண்ட திரு பொன்னத்துரை சிங்கராஜா அவர்கள்
24/06/2010 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.


மண்டைதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி கனகரட்ணம் பத்மினிமாலா
அவர்கள்26/06/2010அன்று மண்டைதீவில் அகாலமரணமானார்.


அல்லைப்பிட்டி 3ம்வட்டாரத்தைச்சேர்ந்த திரு சிதம்பரப்பிள்ளை குழந்தைவேலு அவர்கள்30/05/2010 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.


அல்லைப்பிட்டி 2ம்வட்டாரத்தைச்சேர்ந்த திரு அந்தோணி இராசலிங்கம்
அவர்கள் 17/06/2010 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.


அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த திருமதி மடுத்தீன் ஆரோக்கியம்
அவர்கள் அல்லைப்பிட்டியில் காலமானார்.



செவ்வாய், 29 ஜூன், 2010

      
பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் தற்கொலை
 7/4/2010 9:02:34 PM -உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் கால்பந்து இமயம் பிரேசில் சரிந்த சோகத்தில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இத்தொடர் ஆரம்பமாகும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ, அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார்.

சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி, அவரை சேர்க்க மறுத்தார். விளைவு? தோல்விதான்.

முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.கடந்த 2002இல் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணி, 2006இல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014இல் பிரேசிலில் நடைபெற உள்ள 20ஆவது உலக கிண்ண தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

            மண்டைதீவு கண்ணகி அம்மன் பொங்கல்
          ************************************************************************************
20வருடங்களுக்கு மேலாக அதியுயர் பாதுகாப்புவலயத்திற்குள் இருந்த
புகழ்பெற்ற மண்டைதீவு  கண்ணகி அம்மன் பொங்கல்விழா திங்கள் அன்று வெகு சிறப்பாக
நடைபெற்றது. மேலும் இவ்வாலயம் முற்றாக சேதமடைந்து உள்ளதால்
மீளவும் ஆலையத்தை புதுப்பிப்பதற்கு புலம்பெயர் மண்டைதீவு மக்களிடம்
கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 28 ஜூன், 2010



அல்லைப்பிட்டியில் 26/06/2010  சனிக்கிழமை அன்று நடைபெற்ற அமரர் திரு பொன்னுத்துரை சிங்கராஜா
அவர்களின் இறுதிநிகழ்வுகளின் 
நிழல்ப்படத்தொகுப்பு allaipiddy@gmail.com
உள்ளே 15 படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன!





















அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும்இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக
பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன
போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றார்கள்










பாரீசில் 27/062010 ஞாயிறு அன்று நடைபெற்ற திரு சசிகுமார்(குமார்) குபேரினி!!அவர்களின் திருமண நிகழ்வு நிழல்ப்படம்!!!(அவர்களின் அனுமதியுடனேயே இப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது).















ஞாயிறு, 27 ஜூன், 2010

                     முக்கிய செய்திகள்
         ***************************************
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை நிரந்தர முகவரியாகவும் மண்டைதீவு 4ம் வட்டாரத்தை தற்போதய முகவரியாகவும் கொண்ட செல்வி
கனகரட்ணம் பத்மினிமாலா(சாந்தி)அவர்கள்
26/06/2010சனிக்கழமை அன்று மண்டைதீவில்அகாலமரணமானார்



அல்லைப்பிட்டி அந்தோனியார் ஆலைய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று இறுதிநாளான
இன்று திருச்சுருபப்பவனியும் இடம்பெற்றது          







அல்லைப்பிட்டி ஆயிரம் குடியேற்ற திட்டம்
**********************************************************************************

அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்
வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீடுகள் கட்டும் வேலை
நடைபெற்றுவருகிறது.
                                                          
                        
வீதி திறப்பு                               
                         *********************                            

அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும் இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக
பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன
போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றார்கள்


                                  அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் தெரிவிப்பு
                                  *************************************************
அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னதுரை இரத்தினேஸ்வரன்(இரத்தினம்) அவர்களுடன் நாம் தொடர்பினை மேற்கொண்டபோது அல்லைப்பிட்டியில் தற்போது 400குடும்பங்கள் வரை மீள்குடியேறியுள்ளதாகவும். பாடசாலை 300க்கும் அதிகமான மாணவர்களுடன்
சிறப்பாக கல்வி போதிப்பதாகவும் அல்லைப்பிட்டி முழுவதற்கும் மின்சாரம்
வழங்கப்பட்டிருப்பதாகவும் அல்லைப்பிட்டி மக்களின் அடிப்படைவசதிகள்
யாவும் சீரமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்

.
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி
                         ***********************************************************
மண்டைதீவு பகுதியில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலையத்துக்குள்
இருக்கும் பொதுமக்களின் வீடுகளையும் உடைமைகளையும் பார்வையிட.
கட்டம் கட்டமாக பொதுமக்களை படையினர் அழைத்துச்சென்றனர்



மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின் அன்பளிப்பு
*****************************************************************************
மண்டைதீவு மக்களுக்கு மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின்களை
அன்பளிப்பாய் வழங்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கே இவ்வுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் சிறுகைத்தொழிலை ஊக்கப்படுத்துமுகமாகவும் தெரிவுசெய்யப்பட்ட.
பலருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது


வெள்ளி, 25 ஜூன், 2010

                           மரண அறிவித்தல்                                           
மண்ணில்***02/11/1941விண்ணில்***24/06/2010
                    அமரர் திரு பொன்னுத்துரை சிங்கராஐா
அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் மண்கும்பானை வாழ்விடமாகவும்
கொண்ட திரு பொன்னுத்துரை சிங்கராஐா அவர்கள் 24/06/2010 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு பொன்னுத்துரை
பிரான்சிஸ்கா(அன்னம்)ஆகியோரின் பாசமிகு மகனும். சத்தியேஸ்வரியின்
அருமைக்கணவரும்.ஞானம்மா- பற்றிமா-ஞானேந்திரன்-அருள்சீலன்-ராணிசிலஸ்-ஜெயரட்ணம்-யோகரட்ணம்-ஆகியோரின்அன்புச்சகோதரரும்
றஜனி-நிறஞ்சினி
யாழினி-சிறிகரன்(இந்தியா)நந்தினி-காலஞ்சென்ற சுகந்தி-பவானி-பிரதாப்-
ஆகியோரின் பாசமிகு தந்தையும்-மனோகரநாதன்-சிவானந்தராசா-ஐீவகாந்-
கலைவாணி(இந்தியா)-ரவிராஐ்-மலர்(இந்தியா)அன்ரன்(பிரான்ஸ்)யோசை(பிரான்ஸ்)ரெஜி(கனடா)யுட்(கனடா)ஆகியோரின் மாமனாரும்-காலஞ்சென்ற
அலெக்ஸ்சாண்டரின் மைத்துனரும்-காலஞ்சென்ற குமாரசாமி-புமணியின் அருமை மருமகனும்-கனகரட்ணத்தின் அன்பு மைத்துனரும்-குருபரன்-திவ்வியா-கிருசன்-நிரோஐன்-
சரன்யா-சிவனோஐன்-வினோஐ்-கரிசனா-கரிசன்-ஆகியோரின் அருமைப் பேரனும் திரேசாவின் அன்பு பெறாமகனும்ஆவார். அன்னாரின் உடல் மண்கும்பானில் உள்ள அவரது இல்லத்தில்
வைக்கப்பட்டு-26/06/2010சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டி உத்தரிய மாதா
ஆலையத்தில் திருப்பலி கொடுக்கப்பட்டு அல்லைப்பிட்டி சேமக்காலையில்
நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
தொடர்புகளுக்கு----
றஐனி(இலங்கை)****0094214902084

சிறிகரன்(இந்தியா)****00919710948420

ஞானம்மா(இந்தியா)***00914424763365

ரெஐி(கனடா)*****0016472901845

அன்ரன்(பிரான்ஸ்)0033142571036

ராணிசிலஸ்(பிரான்ஸ்)0033344701835

யோகரட்ணம்(பிரித்தானியா-00447538002550
            
அமரர் திருபொன்னுத்துரை சிங்கராஐா அவர்கள் தமது அன்புச்சகோதரியுடன்தோன்றும் இந்தப்படம் அன்னாரை ஞாபகப்படுத்தும் முகமாக இப்படம் அவரின் உறவினர்களின் அனுமதியுடனேயே பதிவுசெய்யப்பட்டு உள்ளது.

                                                  நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்
                                                               ***************************************************
நயினாதீவு ஸ்ரீ  நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் இம்முறை கலந்து
கொண்டனர் தென்னிலங்கையில் இருந்து இம்முறை அதிகளவான சிங்கள மக்களும் இம்முறை
திருவிழாவில் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும் ஏராளமான
திருட்டுக்களும் இம்முறை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















புதன், 23 ஜூன், 2010

வணக்கம் ஏன் இந்த இணையத்தளம்?


































 உங்கள் விளம்பரங்கள்
அனைத்தையும் இலவசமாக இப்பகுதியில் பதிவுசெய்கினே்றோம் நீங்கள்தேடும்
எம் ஊர் மக்களுடனான தொடர்பினை
ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்தித்தருகின்றோம் 
அனைத்துதொடர்புகளுக்கும் allaipiddy@gmail.com                                      



































                                                                  செய்திகள் 
            
                                                                 ******************            

                                     அல்லைப்பிட்டி குடியேற்ற திட்டம்          


அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்
வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டி
முடிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீடுகள் கட்டும் வேலை
நடைபெற்றுவருகிறது.
                                                           வீதி திறப்பு
                                                        
                                                          ---------------

அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும் இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக
பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன
போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள்  
தெரிவிக்கின்றார்கள்
.

                                  அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் தெரிவிப்பு
                                  *************************************************
அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னதுரை இரத்தினேஸ்வரன்(இரத்தினம்) அவர்களுடன் நாம் தொடர்பினை மேற்கொண்டபோது அல்லைப்பிட்டியில் தற்போது 400குடும்பங்கள் வரை மீள்குடியேறியுள்ளதாகவும். பாடசாலை 300க்கும் அதிகமான மாணவர்களுடன்
சிறப்பாக கல்வி போதிப்பதாகவும் அல்லைப்பிட்டி முழுவதற்கும் மின்சாரம்
வழங்கப்பட்டிருப்பதாகவும் அல்லைப்பிட்டி மக்களின் அடிப்படைவசதிகள்
யாவும் சீரமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்

.
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி
                         ***********************************************************
மண்டைதீவு பகுதியில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலையத்துக்குள்
இருக்கும் பொதுமக்களின் வீடுகளையும் உடைமைகளையும் பார்வையிட.
கட்டம் கட்டமாக பொதுமக்களை படையினர் அழைத்துச்சென்றனர்



மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின் அன்பளிப்பு
*****************************************************************************
மண்டைதீவு மக்களுக்கு மண்டைதீவு சுவிஸ் ஒன்றியம் தையல்மிசின்களை
அன்பளிப்பாய் வழங்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கே இவ்வுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் சிறுகைத்தொழிலை ஊக்கப்படுத்துமுகமாகவும் தெரிவுசெய்யப்பட்ட.
பலருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது


.அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் கோரிக்கை
********************************************************************************
அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் தங்கள் போக்குவரத்துக்கு உதவியாக அல்லை மண்கும்பான் ஊடாக போக்குவரத்து சேவையொன்றை வங்களாவடி வரை ஆரம்பிக்குமாறு
கோரிக்கை ஒன்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளனர்.

மரண அறிவித்தல
*************************


அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை சேர்ந்த திரு சிதம்பரப்பிள்ளை குழந்தைவேலு அவர்கள்30-05-2010 சனியன்று அல்லைப்பிட்டியில் காலமானார்












**************************************************************************


அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி மடுத்தீன் ஆரோக்கியம்
 அவர்கள் அல்லைப்பிட்டியில் காலமானார்.

************************************************************************************

அல்லைப்பிட்டி 2ம்வட்டாரத்தை சேர்ந்த திரு அந்தோனி இராசலிங்கம்
அவா்கள் 17/06/2010 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
                                

அல்லை ஊர்(கவிதை)
**************************
அலைகள் வந்து தாலாட்டும் அல்லைஊராம்
ஆவினங்கள் பால் மழையாய்ப் பொழியும் ஊராம்
வெள்ளைமணற் பரப்பாகி விரிந்த ஊராம்
வேளாண்மை தனில் என்றும் உயர்ந்த ஊராம்
புள்ளி மயில் வேலவனும் துள்ளி ஆடி
புனித திருத்தலங்கள் அங்கு நிறைந்ந ஊராம்
மூன்றுமுடி அம்மனுடன் முருகனும் சேர்ந்து
முன்னின்று வரவேற்கும் சிறந்த ஊராம்
தேவாலயங்களுடன் தேன் சொரியும்
பூமரங்கள் மாமரங்கள் நிறைந்த ஊராம்
கடல் வளமும் கனிவளமும் கொண்ட ஊராம்
கல்விமான்கள் பலரையுமே ஈன்ற ஊராம்
தென்றல் வந்து தாலாட்டும் சிறிய ஊராம் 
தேசியத்தின் கற்பகதரு நிறைந்த ஊராம்
அல்லி ராணி அரசாண்ட அழகு ஊராம்
ஆனந்தமாய் புள்ளினங்கள் பாடும் ஊராம்
சின்னச் சின்னக் குருவிகளும் சிரித்துப் பேசி
சிங்காரமாய்ப் பறந்திருக்கும் அல்லை ஊராம்
கிளிகள் வந்து பழங்கள் உண்டு கிசுகிசுக்குமே
குயில்கள் அங்கு போட்டி போட்டுப் பாட்டிசைக்குமே
பன்னிரண்டு மாதங்களும் பயிர் செழிக்குமே
மண்ணின் வளம் அனைவரையும் மயங்க வைக்குமே
நெற்பயிர்கள் விளைந்து அங்கு நெஞ்சை ஈர்க்குமே
நேசம் நிறை மக்கள் அன்பு மனிதம் காட்டுமே
கவிஞர்களை ஈன்ற அந்த அல்லை ஊரிலே
காவலுக்கு வைரவரும் ஐயனாருமே
கைகோர்த்து நின்று அங்கு கருணை காட்டவே
மெல்லியதாய் இசைவழங்கி கடலின் அலைகள்தான்
மெதுவாக இசைபாடி இன்பம் ஊட்டுமே
இத்தனையும் நிறைந்த அந்த இனிய ஊரையே
இனி எழுத எனக்கு இங்கு அறிவு போதாது

திருமதி: அம்பிகா இராஜலிங்கம்         
சுவிஸ் (அல்லை).

அன்பான மக்களே!
இப்பகுதியில் அல்லைப்பிட்டி மண்கும்பாண் மண்டைதீவு ஆகியபகுதிகளில்
மரணித்த எம் ஊரவர்களின் நிழல்ப்படங்களை நிரந்தரமாக பதிவு செய்ய
இருப்பதால் இந்த இணையத்திற்கு உங்கள் உறவினர்கள் யாரேனும் மரணித்து
இருந்தால் முழுப்பெயர் தோற்றம் மறைந்த திகதியிட்டு ஒரு நிழல்ப்படத்தை
கீழ்காணும் மின் அஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.
allaipiddy@gmail.com


மண்டைதீவு காவல் தெய்வம் கண்ணகியின்

 
மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகியம்மனின்  
பொங்கல் விழாவினை தலைமை பூசகரின் முயற்சினால் மக்களின் பங்களிப்போடு நடாத்த முன்வந்துள்ளனர்.
மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம்  கண்ணகியம்மனின்   பொங்கல்விழாவினை
தலைமை பூசகரின் முயற்சினால் மக்களின் பங்களிப்போடு நடாத்த முன்வந்துள்ளதாக
மண்டைதீவு மக்கள் தெரிவிக்கும் போது அவர்கள் மனங்களில் வேதனை தளும்பி இருந்தது வேதனையை அளித்தது . வருடா  வருடமாக அம்மன்  ஊர் முழுவதும் ஊர்வலம் வந்து முத்தரசி சேர்த்து வந்து பொங்கல் செய்வது எமது வழக்கம் .
கடந்த இருபது வருடமாக அதி உயர பாதுகாப்பு  வளையம் என 
பூசை இன்றி விளக்கேத்தல் இன்றி தவிக்கவிட்ட அம்மனை   
தரிசிக்க  கடல் படையினர் பாதுகாப்பு வளையம் சிறிது தளர்த்தி
அவர்களின் அனுமதியுடன் சென்று வர அனுமதி வழங்குவதால்
ஊர்வலம் தவிர்ந்த பொங்கலினை 28 .06 .2010 திங்கள்கிழமை அன்று
 நடாத்த முடிவுசெய்துள்ளனர்,என அறியமுடிகின்றது.
அனைவரின் முயற்சிக்கும்  நன்றிகள் .
  
கடற்கரை ஓரத்திலே
காவல் தெய்வமென
கற்பகமாய் வீற்றிருக்கும்
கற்புக்கரசியே கண்ணகியே
உன்பாதம் தொழுதோமம்மா
எந்நாளும் காத்தருள்வாய்
ஆனிப் பறுவத்து
முதல் வெள்ளியில்
முத்தரிசித் தண்டளுடன்
ஊர் எல்லை எங்கும்
ஊர்வலமாய்ச் சென்று
உன் பக்தர்களைக் காப்பவளே
பொங்கல் படையலுடன்
விடியும்வரை பூசைகளும்
அதிகாலையில் தீமிதிப்புடன்
தீவேட்டிப் பூசையுடன்
பக்தர்கள் ஒன்று கூடி
பொங்கல் திருநாளை
முறையாக முடித்துவைப்போம்
அகிலாண்டேஸ்வரியே தாயே
அம்பிகையே கண்ணகியே
ஆதரித்துக் காத்தருள்வாய்… 


http://www.arulsothidam.net/

அல்லை அருள் சோதிடம்
                    சுவிஸ்

செவ்வாய், 22 ஜூன், 2010

இந்த பகுதியில் விரைவில் இது கதையல்ல நிஐம்
புதியபகுதி ஆரம்பமாகவுள்ளது.

                                                         -------------------------------
அத்தோடு அல்லை பண்டிதர் அமரர் திரு க.வ .ஆறுமுகத்தின் படைப்புக்கள்
வெளிவரவிருக்கின்றன!!!.
அத்தோடு அல்லை பாவலர் அமரர் திரு சத்தியசீலனின் படைப்புக்கள்
வெளிவரவிருக்கின்றன!!!
அத்தோடு !!அல்லைப்பிட்டி வரலாறு !!!நீண்ட
தொடர் கடடுரையும். வெளிவரவிருக்கிறது.



இவர் அல்லை பண்டிதர்அமரர் திரு
க.வ.ஆறுமுகம் அவர்கள்
****************************


பிறப்பு---1922
இறப்பு---2003

செவ்வாய், 15 ஜூன், 2010






மேலே உள்ள படம் நாங்கள் ஒன்றாய் படித்த பாடசாலை பராசக்தி வித்தியாசாலை
   








அல்லை பிலிப்நேரியார் ஆலையம்  



                                      

      மண்டைதீவு கண்ணகை அம்மன்                                                       

    
                                          மண்டைதீவு ஞானவைரவர் ஆலையம்





                
     அல்லை பிலிப்நேரியார்
         ஆலையம் பழயது.











அல்லை பிலிப்நேரியார்
ஆலையம் புதியது.

                                       







     அல்லைப்பிட்டி யாழ் பிரதான வீதி          


ஞாயிறு, 13 ஜூன், 2010

வீதி திறப்பு


அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும் இணைக்கும் உள் வீதியை
20 வருடங்களின் பின் மக்கள்
பயன்படுத்துவதற்கு படையினர் அனுமதி வழங்கியுள்ளனர் எனினும் இவ்வீதியை வாகனப்போக்கு வரத்துக்கு தற்போது பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுவதாக
இப்பகுதி மக்கள்  தெரிவித்தனர்



சனி, 12 ஜூன், 2010

அல்லைப்பிட்டி ஒரு குறும்பார்வை !!!








இந்த வாரம் முதல்************

பண்டிதர்- கலாநிதி திரு.செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்
எழுதும்' "அல்லைப்பிட்டி ஒரு குறும்பார்வை"
நீண்ட தொடர்' இப்பகுதியில் பதிவு செய்யப்படுகின்றது.
அல்லைப்பிட்டியின் வரலாற்றை நீங்களும் படித்து உங்கள்பிள்ளைகளையும்





படிக்க வையுங்கள்.



இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப்போற்றப்படுவது இலங்கைத்தீவு. இதன்கண்
அமைந்துள்ள ஒன்பது மாகாணங்களில் சிரசாக விளங்குவது யாழ்ப்பாணத்தைத்
தலைநகராகக் கொண்ட வடமாகாணம். இந்தமாகாணத்தின்கண் அடங்கியுள்ள
ஜந்து மாவட்டங்களுள் தலையாயது யாழ்ப்பாண மாவட்டம். யாழ்ப்பாண மாவட்டத்தினுள் தீவுப்பகுதியும் உள்ளடங்குவதாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து
தெற்குப்பக்கமாக அமைந்திருக்கும் பண்ணைக்கடலை ஊடறுத்துப் போடப்பட்ட
வீதியினைக் கடந்து சென்றால் தெற்கு, தென்மேற்குப் புறங்களில் கிழக்கே
மண்டைதீவில் தொடங்கி வேலணைத்தீவு(லைடன்தீவு),புங்குடுதீவு, நயினாதீவு
நெடுந்தீவு, அனலைதீவு,எழுவைதீவு,காரைநகர்(காரைதீவு) ஆகிய தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. இவைதவிர மக்கள் வசிக்காத சிறுசிறு
தீவுக்கூட்டங்களும் உள்ளன.மிகத்தூரத்தேயுள்ள(புங்குடுதீவிலிருந்து 12 கி.மீ
தூரத்தில்)நெடுந்தீவு , மற்றும் நயினாதீவு,எழுவைதீவு,அனலைதீவு ஆகியன
வீதிகளால் இணைக்கப்படாதவை. சிறிய- பெரிய மோட்டார்ப்படகுகளின் மூலமே அவற்றுக்கு மக்கள் பயணம் செய்கின்றனர். அவைகூடத் திருப்திகரமாய்
இல்லை. 


யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணைக்கடலைக் கடந்தால் தெற்குப்புறமாக முதலில் காணப்படுவது அல்லைப்பிட்டி என்னும் அழகிய கிராமமாகும்.
இதன் கிழக்குப்புறமாகவுள்ள மூன்று கடல்மைல்தூரத்துப் பரவைக்கடலைத்
தாண்டினால் மண்டைதீவைத் தரிசிக்கலாம். தெற்குப்பக்கமாக ஆழ்கடல்
அமைந்துள்ளது. வடக்குக் கடற்கரை ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்கிறது.
மேற்குத்திசையில் தொடர்ச்சியாக மண்கும்பான் கிராமம் காணப்படுகிறது.
4.8 கி.மீ கிழக்குமேற்காக நீளத்தையும் 3கி. மீ வடக்குத் தெற்கானஅகலத்தையும்
கொண்ட நீள்சதுர வடிவிலானது அல்லைப்பிட்டிச் சிற்றூர்.ஒரு காலத்தில்
சிறுசிறு மணற்குன்றுகளைக் கொண்டதாயிருந்தாலும், மண் அகழ்வினால்
எதுவிதமான மணற்பிட்டிகளும் அங்கில்லை.மணற்கிராமமாயினும், மணல்
அகழ்ந்த பள்ளங்கள்தான் காணப்படுகின்றன. 
பெருமளவுக்கு பனைவளம் நிறைந்த இவ்வூரில் நல்ல தண்ணீர் வளம் அதிகமுண்டு.வடக்குத் தரவைப் பகுதிகளை விட ஏனையவிடங்களில் நன்னீரூற்றுக் காணப்படுவதால் பன்னிரு மாதங்களும் பயிர்செய்யக்கூடிய
வாய்ப்புகள் உள்ளன. பணப்பயிரான புகையிலையுடன்,மிளகாய்,வெங்காயம்
தக்காளி, பயற்றை,கத்தரி முதலான பயிர்வகைகளும், மரக்கறிவகைகளும்
செய்கை பண்ணப்படுவதுண்டு.வானம் பார்த்த பூமியாதலால் தைமாதக் கடைசியில் அல்லது மாசி மாதத்தில் அறுவடை செய்யக்கூடியதாக நெல்
வேளாண்மையும் ஓரளவு உண்டு.வீடுகளில் தென்னையுடன் முருங்கை,போன்றவைகளும் காணப்படுகின்றன. வாழை,மா, முதலியனவும்
சிறியஅளவில் உண்டு.மழைக்காலங்களில் குளிர்ச்சியையும் வெயில் காலத்தில் வெம்மையையும் இந்த மண் வழங்கும்.ஆடு, மாடு, கோழி போன்றவைகளை வீடுகளில் வளர்த்துப் பயன்பெறுவர் இவ்வூரவர்கள்.

இவ்வூரில் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னுள்ள இடப்பெயர்வுச் சூழ்நிலைகள்
பெரிய மாற்றத்தினைப் புகுத்தியுள்ளன. மீன்பிடித்தொழிலை மையமாகக் கொண்ட கிறிஸ்தவ மக்கள் ஓரளவுக்கு மீளக் குடியேறிய போதிலும் விவசாயிகளான இந்து மக்களின் குடியேற்ற வீதம் குறைந்து காணப்படுகிறது.
இத்துடன் அல்லைப்பிட்டி-மண்கும்பான் எல்லைக்கு அண்மித்ததாகத் தெற்குக்
கடற்கரைக்குக் கிட்டியதாய் மீனவர்களுக்கான புதிய குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு வருவதைக் காணலாம்
இன்னும் வரும்

வியாழன், 3 ஜூன், 2010