திங்கள், 27 செப்டம்பர், 2010

அல்லை பாரசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்க அடிகல் நாட்டும் விழா!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும்விழா 27/09/2010 திங்கள் அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகள்வில் பராசக்தி வித்தியாலய அதிபர்-ஆசிரியர்கள் உட்பட பெருமளவானபொதுமக்களும்-மற்றும் இளைப்பாறிய ஆசிரியர் திரு சோ.சுப்பிரமணியம்அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். எமது செய்தியாளர் திரு. மாறன் அவர்கள்எடுத்தனுப்பிய 22நிழற்படங்களை இணைத்துள்ளோம்.
அடிக்கல் நாட்டும் விழா கீழே படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன!


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா

கீழே மணிவிழா படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன!
வீரகேசரி பத்திரிகையில் இருந்து.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா 24.09.2010 அன்று கலாசாலையில் உள்ள ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி நா.சண்முகலிங்கன், பேராசிரியர் ம. இரகுநாதன், கலாநிதி த.கலாமணி, லயன் டாக்டர் வை.தியாகராஜா உள்ளிட்ட பெரியோர்கள் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடப்பிடமாகக் கொண்ட செ.திருநாவுக்கரசு வாழ்வில் மிக எளிமையான நிலையில் இருந்து உயர்ந்தவர்.




சனி, 25 செப்டம்பர், 2010

ஊருக்கு உதவிடுவோம் வாரீர்!!!

நீங்கள்கீழேபார்வையிடும்நிழற்படங்கள்அல்லைப்பிட்டிபராசக்தி வித்தியாசாலையின்-இன்றைய தோற்றமே! பாடசாலையின் கிழக்குப்
பக்கமும்-தெற்குப்பக்கமும் மதில்கட்டப்பட்டுள்ளது.மிகுதியாகவுள்ளவடக்கு மேற்குப் பக்கத்திற்கு மதில் கட்டுவதற்குத் தேவையான நிதிஉதவியைபுலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் பெற்றுமதிலைக் கட்டித்தருவதாக அல்லையூர் இணையம் பாடசாலைநிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலில் உறுதியளித்திருக்கின்றது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டியில் நடைபெறும் இரு சட்டவிரோத சம்பவங்கள்- நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன!

கடந்த சில நாட்களாக அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் அதிகளவான மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவ்வூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் மாடுகள் வெட்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புதன், 22 செப்டம்பர், 2010

உங்கட பிள்ளையள் எங்க போகினம்...யாழ் வலம்புரியில்

வெளிநாட்டில இருக்கிறவர்கள்-குளிரிலும்,பனியிலும், சாப்பிட்டும்,சாப்பிடாமலும் தம்மை வருத்தி உழைத்துஊருக்கு பணம் அனுப்பி வைக்க -அங்கு இருப்பவர்களோ! வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது . என்றமமதையோடு,காசைத் தண்ணியாய் செலவுசெய்து மறுபடியும்-மறுபடியும்-போன்பண்ணி.............

அல்லைப்பிட்டியில் இன்று நடைபெற்ற தென்னை நாற்றுகள் நடும் விழா!

தென்னை நாற்றுக்கள்
நடப்படும் இடம்
அல்லைப்பிட்டியில் 21/09/2010 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தென்னைநாற்றுக்கள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் வேலணை அரச அதிகாரிகளும்-அல்லைப்பிட்டி கிராம சேவையாளரும்-பொதுமக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்தனர். அல்லைப்பிட்டி அலுமினியம்தொழிற்சாலைக்கு தெற்குப்பக்கமாகவும். வைரவர் ஆலயத்திற்கு வடக்குப் பக்கமாக அமைந்த பல ஏக்கர் வயல்நிலப்பரப்பில் இந்த தென்னை நாற்றுக்கள்நாட்டப்படுகின்றன.
மேலும் 9படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டியில் நடந்த நிகழ்வின் நிழற்படம்

அல்லையூர் இணையத்திற்காக பிரத்தியேகமாக
நிழற்படம்பிடிக்க ஒத்துழைக்கும்அரசஅதிகாரிகளுடன் மக்கள்

அல்லைப்பிட்டி வாகீசர் நிலையத்திற்கு வீரகேசரி......

அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமுக நிலையத்திற்கு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் வசிக்கும் திரு யூலியேசு ராஜேஸ்அவர்களின் ஆதரவில் ஒரு வருடத்திற்கான சந்தா செலுத்தப்பட்டு ,வீரகேசரி
வாரப்பத்திரிகை இந்தவாரம் முதல் மக்கள் வாசிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே-அல்லையூர் இணையத்தின் பொறுப்பில் உதயன் நாளிதழ் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுளளது .என்பதும் நீங்கள் அறிந்ததே!

மண்டைதீவு ஒரு குறும் பார்வை!

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள 8 தீவுகளில் (எழு தீவு என்பது தவறானது) ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்..ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்!



இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்.
ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்

இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களில் இருவர் படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழில் பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

Hi Jeya




Hi Jeyaமுதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

வேலணை சாட்டிமாதா -பெருநாள் நிழற்படத்தொகுப்பு!

18/09/2010 அன்று இடம்பெற்ற வேலணை சாட்டி மாதா
திருச்சுருப பவனியின் நிழற்படத்தொகுப்பு

யாழ்ப்பாணத்தில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.சத்தியேந்திராவே இவ்வாறு கட்சி ஆரம்பித்துள்ளார்.

யாழில் சட்டவிரோத கழிவுநீர் தடுப்புச் சுவர்கள் மாநகரசபையால் இடிப்பு!


யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற ஓன்பது கழிவு நீர் தடுப்பு சுவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் 
மாநகர சபை இடித்து உடைத்துள்ளது.


வாய்க்கால்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதைத் தடுப்பதன் மூலம் டெங்கு நோயை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் மாநகர சபையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனி, 18 செப்டம்பர், 2010

16 வது ஆண்டு நினைவஞ்சலி



முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வேலணை-சாட்டி மாதா பெருநாள்!






வேலணை சாட்டி மாதா ஆலயப் பெருநாள் நாளை18-09-2010சனியன்று
வெகுசிறப்பாக நடைபெறும்.




மட்டு -பாரியவெடி விபத்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைகளின்போது பாறைகளை உடைக்கின்றமைக்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொள்கலன் ஒன்று இவ்வாறான ஒரு தொகை வெடிபொருட்களுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டியில் நடத்திய 2வது நிகழ்வின் பதிவுகள்!

மேலும் 20 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாசாலைக்கு பிரதி எடுக்கும் இயந்திரம்(photo copy)மிசின் வளங்கும் நிகள்வு 16/09/2010 வியாழன் அன்று கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.


யாழ் பண்ணை வீதியை மண்டைதீவுச் சந்திவரை செப்பனிட அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தரவு!

பண்ணை-வீதி
தீவகம் பண்ணை வீதியில் யாழ்.-மண் டைதீவுச் சந்தி வரையான பகுதியை வரும் மழை காலத்திற்கு முன்னர் தார் இட்டு செப் பனிடுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக யாழ். மாவட்ட அவசர மீள்திட்ட நிதியிலிருந்து 15 மில்லியன் ரூபாய் நிதியை வழங்குமாறு யாழ். அரச அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

4 நாட்களைக் கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டியில் வளங்கிய உதவித்திட்ட நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் ஜெர்மனியில் வாழும் எம்கிராமத்து
உறவின் ஆதரவில் அல்லைப்பிட்டியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்
மக்களுக்கு முதல் கட்டமாக முதலாம் வட்டாரத்தில் வாழும் 15 குடும்பங்களுக்குதலா ஆயிரம் ரூபா வீதம் 13/09/2010 திங்கள் அன்று வாகீசர் சனசமுக நிலய மண்டபத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சனசமுக நிர்வாக சபையும்தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வில் தேனீர் விருந்தும் இடம்பெற்றது.
மேலும் கீழே 23 படங்கள் இணைக்கப்பட்டுளளன!







அல்லைப்பிட்டியில் தினசரி நாளிதழ் உதயன்--


அல்லையூர் இணையத்தின் நேரடி ஆதரவில் அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுகநிலையத்தில் 30/08/2010 திங்கள் முதல் தினசரி நாளிதழான உதயன் பத்திரிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுஇருந்தன. ஆவலோடு பொதுமக்களும் வாகீசர் நிர்வாக சபை உறுப்பினர்களும்பத்திரிகையை பார்வையிடுவதை கீழே இணைக்கப்பட்டுள்ள 7 படங்களில்காணலாம்.



உலகில் 100 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்


மனிதன் வாழ்வதற்கு தேவையான சத்தாண உணவு இன்றி, உலக அளவில் 100 கோடி மக்கள் பசியால் வாடுவதாக ஐ.நா. உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
 இன்றைய நவீன உலகில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை எட்ட போட்டி போட்டு முன்னேறுகின்றன.

பேருவளையில் துப்பாக்கிச் சூடு பட்டு சிறுவன் இறப்பு! ஒன்பது சந்தேகநபர்கள் கைது


 
களுத்துறை மாவட்டத்தின் பேருவளைப் பிரதேசத்தில் பொலிஸாருக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 07 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்தமை தொடர்பாக சந்தேகநபர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

புதன், 15 செப்டம்பர், 2010

நடுக்கடலில் இறக்கி விடப்பட்ட அகதிகள்!

தமிழ்நாட்டில் இருந்து திரும்பிய 13 தமிழ்அகதிகள் மீட்பு புகைப்படங்கள்

இணைக்கப்பட்டுள்ளன!
தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 13 ஈழத்தமிழர்கள் கடல்வழியாக தாயகம் திரும்பிய போது மணல்திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் இன்று படம்.......

இன்றைய ராஜா திரையரங்கு
எனது யாழ்ப்பாணப் பயணத்தில் திருத்தலங்களைத் தரிசிக்கும் நிகழ்ச்சி நிரலின் படி அன்றொரு நாள் லுமாலாக் குதிரையின் மீதேறி நான் சென்றது தியேட்டர் வலம். காங்கேசன் துறை வீதியில் முதலில் சந்தித்தது மனோகரா தியேட்டரை.

கொழும்பு - தாண்டிக்குளம் புகையிரதம் தடம் புரண்டது:



கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதம் நேற்று முன்நாள் மாலை 6.00 மணியளவில் சாலியபுர பகுதியில் தடம் புரண்டதால் புகையிரதத் திணைக்களத்துக்கு கோடிக்கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் அனாதைகளாக வீதிகளில் விடப்படும் குழந்தைகள்?

பதுளை - பசறை வீதியின் பஸ் தரிப்பு நிலையமொன்றில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையொன்றை மீட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 

புடவைத் துண்டொன்றின் மூலம் சுற்றிய நிலையிலிருந்த இந்த குழந்தைக்கு சுமார் ஒன்றரை மாத வயதிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாரீஸ் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை - மக்கள் வெளியேற்றப்பட்டனர்




பிரான்ஸ் தலைநகர் பரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வேலணை சாட்டிக் கடலில் பெண்களுடன் சேட்டைவிட்ட--------

தென்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் வேலணை சாட்டிக் கடற்கரையில் சேட்டை விட்ட ஏழு இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் சிறுவர் ----


சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான யப்பானிய நிறுவனத்தினரும், ஜப்பானிய மக்களும் இணைந்து யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கென சிகிச்சை விடுதி ஒன்றை மூன்று கோடி ரூபாய் செலவில்அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இச்சிறுவர் சிகிச்சை விடுதியின் அங்குரார்ப்பண விழா வெகுவிமரிசையாக இன்று இடம்பெற்றது.

A-9- நெடுஞ்சாலை திறந்து விடப்பட்ட பின்னர் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

யாழ் - கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்ட பின்னர் இதுவரை தென்பகுதியிலிருந்து சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வடபகுதிக்கு சென்றுள்ளதாக சிறிலங்கா அரசதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடபகுதியில் வேலை நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 தொடக்கம் 1500 சுற்றுலாப் பயணிகள் வரை தங்கியிருக்கின்றனர்.
விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இருபதாயிரம் வரை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசூலா விமான விபத்தில் 15 பயணிகள் பலி!

வெனிசூலாவின் மெனுவல் கார்லோஸ் பியார் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பயணிகள் பலியாகியுள்ளனர்.

வவுனியாவில் இருந்து காங்கேசன் துறைக்கு புதிய ரயில் பாதைகள்!

வவுனியாவில் இருந்து காங்கேசன் துறைக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்க படுகின்றன . இந்த புதிய பாதைகள் எதிர் வரும் இரண்டு வருடங்களுக்குள் முடிவுற்று விடும் என

ஒரு மணி நேரம் இதயம் நின்றும் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்


வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த தம்பதியர் டேவ் (41) - ஆமி (38). இவர்களது 3-வது குழந்தை கோர் ஆட்டிசன் (ஒன்றே முக்கால் வயது). கொல
ராடோ மாநிலம் டென்வர் நகரில் தங்களது பாரம்பரிய பண்ணை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஜூலையில் சென்றிருந்தார் ஆமி.
குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கோர் திடீரென காணாமல் போனான்.

நாவற்குழியில் மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்

         சாவகச்சேரி, செப்.14
நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில்  மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலை யில் யுவதியின் சடலம் காணப்பட்டது.
இவரது சடலத்தை சாவகச்சேரி பொலி ஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.             

மஹிந்த வந்து சந்திக்காவிட்டால் தற்கொலை செய்வேன்"

ஹோர்டன் பிளேஸிலுள்ள 40 அடி உயரமான ஒரு கோபுரத்தில் ஏறியுள்ள அடையாளங் காணப்படாத நபர் ஒருவர் தம்மை ஜனாதிபதி மஹிந்த வந்து சந்திக்காவிட்டால் தாம் தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறார்.

வாடகைத்தாய் மூலம் பிறக்கவிருந்த பின்லாடன் வாரிசை நிர்மூலமாக்கினர்


லண்டன் : சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் மகன் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் இறந்து விட்டன. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன். இவருக்கு ஏராளமான மனைவிகள் உள்ளனர்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்ட மோகினிப் பேய்(பேய்க்கதை)

அமாவாசை இரவு. திருச்செந்தூர் தியேட்டரில் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் இருவரும். அவர்களது ஊர் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி. கொத்தனார் வேலை பார்ப்பவர்கள். ‘வழியில ரெண்டு மூணு இடத்துல முனிப்பாய்ச்சல் உண்டு’ என்று ஊர் பெரியவர்கள் சொல்வது சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தவனுக்கு திடீரென நினைவு வந்தது. அந்த நேரம் பார்த்து, ஒண்ணாவது மைல் முக்கு பகுதியில் கும்மென்று மல்லிகைப்பூ வாசம் வீசியது. வேகவேகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

மனம் தளராது கல்வியோடு போராடி வென்ற நம்மூர்மருத்துவர் சசிகுமார்

அல்லைப்பிட்டி இளம் மருத்துவர்
திரு மன்மதராசன் சசிகுமார்

உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்
ஒன்பது சகோதரங்களில் ஒருவராகப் பிறந்து
உறுதியோடு கல்வியைக்கற்றுவிரைவில்ஒருமருத்துவராக வெளியேறப் போகும் 28 வயதுநம்மூர் இளைஞனின் கதை!
எம்மூரில் தோன்றியுள்ள இளம் மருத்துவரை,தெரிந்துகொள்ள அல்லையூர்
இணையம் அவரோடு தொடர்பினை ஏற்படுத்தியது.

யாழ் போதனா வைத்திய சாலைக்கு அமைச்சர் விஜயம்!

வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலமைகளை ஆராய்தார்.